நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்


நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:25 AM GMT (Updated: 2021-08-09T06:55:31+05:30)

நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்.

தமிழ் பட உலகில் காதல் கொண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி முன்னணி டைரக்டராக உயர்ந்தவர் செல்வராகவன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்கள் அவரது இயக்கத்தில் வந்தன. செல்வராகவன் தற்போது முழு நடிகராக மாறி வருகிறார். சாணி காயிதம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேசும் நடிக்கிறார். 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து அதிரடி படமாக தயாராகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கவும் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவரது கதாபாத்திரம் வில்லனாக இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. பீஸ்ட் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கின்றனர். தொடர்ந்து மேலும் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க செல்வராகவனை இயக்குனர்கள் அணுகி பேசி வருகிறார்கள்.

Next Story