சினிமா செய்திகள்

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார் + "||" + Veteran Actor Anupam Shyam Dies At 63

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார்

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார்
பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார். அவருக்கு வயது 63.
மும்பை,

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார். அவருக்கு வயது 63. கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுபம் ஷ்யாம் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில்  சிகிச்சைப் பலனின்றி அனுபம் ஷ்யாம் இன்று காலமானார். மும்பையில் இருக்கும் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

‘லஜ்ஜா’, ‘நாயக்’,‘சத்யா’,‘தில் சே’, ‘பண்டிட் குயின்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபம் ஷ்யாம். ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.