அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி தரும் ZEE5 குளோபல்


அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி தரும் ZEE5 குளோபல்
x
தினத்தந்தி 9 Aug 2021 5:44 PM GMT (Updated: 2021-08-09T23:14:30+05:30)

ZEE5 குளோபல் நிறுவனம் அமெரிக்க வாழ் தமிழர்கள் இனி தங்களுக்கு பிடித்த சமீபத்தில் வெளியான வெற்றிப்படங்கள், நாடகங்கள், டிவி சீரியல்கள் போன்றவற்றை, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதையோ ஏற்கனவே ஒளிப்பரப்பானவையோ, கண்டுக்களிக்கக்கூடிய நற்செய்தியை அறிவித்துள்ளது.

ZEE5 குளோபல் நிறுவனம் அமெரிக்க வாழ் தமிழர்கள் இனி தங்களுக்கு பிடித்த சமீபத்தில் வெளியான வெற்றிப்படங்கள், நாடகங்கள், டிவி சீரியல்கள் போன்றவற்றை, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதையோ ஏற்கனவே ஒளிப்பரப்பானவையோ, கண்டுக்களிக்கக்கூடிய நற்செய்தியை அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி கிழக்காசிய பொழுதுபோக்கு பெட்டகத்தில் இருந்து கிட்டத்தட்ட 130,000 மணிநேர இந்திய, வங்காள, மற்றும் பாகிஸ்தானிய நிகழ்சிகளை வெறும் 49.99 டாலர் வருடத்திற்கு என்ற கட்டணத்தில் பார்க்க முடியும்.

ரசிகர்கள் பிரபலமான தமிழ் டிவி நிகழ்ச்சிகளான செம்பருத்தி, சத்யா, நீதானே என் பொன்வசந்தம், புதுபுது அர்த்தங்கள், திருமதி ஹிட்லர், யாரடி நீ மோகினி போன்றவற்றையும் வெற்றிகரமான நிகழ்சிகளான தந்து விட்டேன் என்னை, முகிலன், ஆட்டோ ஷங்கர், திரவம், D7 மற்றும் போஸ்ட்மேன் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடியும். எல்லா டிவி சீரியல்களையும் விட்ட இடத்திலிருந்தோ ஆரம்பத்தில் இருந்தோ எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

தமிழ் நாட்டு திரைப்படங்களில் பலதரப்பட்ட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் விஜய்சேதுபதியின் க பே ரானாசிங்கம், நயன்தாராவின் கோலமாவு கோகிலா, பிரபுதேவா மற்றும் தம்மனாவின் தேவி2, சூப்பர்ஸடார்களின் படங்களான அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஜய்யின் மெர்சல், விஷாலின் இரும்புத்திரை மற்றும் மாதவனின் விக்ரம் வேதா போன்றவற்றையும் இதில் காணலாம். இதுமட்டுமின்றி புதிய படங்களான கமலி ஃபிரம் நடுக்காவேரி, மிருகா, கன்னி ராசி, களத்தில் சந்திப்போம், ஓ மை கடவுளே, மற்றும் பூமெராங் போன்றவற்றையும், தமிழ் ஒரிஜினல் படங்களான மலேசியா டு அம்நேசியா, மதில், இக்லூ, லாக்கப், கள்ளச்சிரிப்பு, சிங்கப்பெண்ணே போலீஸ் டைரி 2.௦, மற்றும் சிகை போன்றவற்றையும் காணலாம்.

தென்னிந்திய ரசிகர்களுக்கு S.S.ராஜமௌளியின் மிக பிரம்மாண்ட தயாரிப்பான ஜூனியர் NTR, ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மாரிஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும், எல்லா தென்னிந்திய மொழிகளிலும் வரப்போகும் RRR திரைபடத்தை 
ZEE5 குளோபல்
வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள ரசிகர்கள் கண்டுகளிக்க டிவி சீரியல்களான செம்பருத்தி, MRS. ஹிட்லர், பூக்கலாம் வரவி, நீயும் ஞானும், கார்த்திகதீபம் மற்றும் மனம்போல் மாங்கல்யம் போன்றவைகளும், திரைப்படங்களான சதுர் முகம், ஒபரேஷன்ஸ் ஜாவா, மூத்தோன், வுல்ப், அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டு, மதுர ராஜா போன்றவைகளையும் கண்டு களிக்கலாம்.

தெலுகு ரசிகர்களுக்கு பிரேமா எந்தன் மதுரம், கல்யாண வைபோகம், த்ரினாயணி போன்ற திரைப்படங்களும், நோ ௧ கோடலு, ஹிட்லர் கரி பெல்லாம், கிருஷ்ணா துளசி, ஸ்வர்ண பேலஸ் போன்ற நாடகங்களும் உள்ளன. மேலும் ரங்க தே, சீதா ஆன் தி ரோட், சோலோ ப்ரதுக்கே சோ பெட்டெர், கீதா கோவிந்தம், நின்னில நின்னில, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, அரவிந்த சமேத வீரராகவா, டாக்ஸி வாலா போன்றவைகளையும் காணலாம்.

இவற்றை தவிர தெலுகு ஒரிஜினல் தயாரிப்புகளான ஷூட்அவுட் அட் அலைர், எக்ஸ்பயரி டேட், லொள் சலாம், ரூம் நம்பர் 54, அம்ருதம் த்விதீயம், மற்றும் அனகனகா போன்றவற்றை மக்கள் கண்டு ரசிக்கலாம்.

தெற்காசியாவின் கதைகள் எல்லாம் ஒரே தளத்தில்
அமெரிக்காவில் தற்போது புதிதாக களமிறங்கியுள்ள ZEE5 குளோபல் தெற்காசியாவின் பொழுதுபோக்கை இந்திய மற்றும் தெற்காசிய ரசிகர்களுக்காக கொண்டு வந்துள்ளது. இத்தளத்தில் 18 மொழிகளில் டப் செய்யப்பட்டோ அல்லது ஆங்கில சப்டைட்டில்களுடனோ வெளியிடப்படுகிறது.

இதில் சமீபத்தில் ஸ்டேஜ் ஆப் சீஜ்: டெம்பிள் அட்டேக் என்ற குஜராத்தில் உள்ள அக்ஷர்தம் கோவிலில் 2002 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலை பற்றிய படமும், சுரைல்ஸ் என்ற பாகிஸ்தானி சீரியலும் ஒளிப்பரபப்படுகிறது.

இதைத்தவிர ரசிகர்கள் ஹிந்தி காமடி நிகழ்ச்சியான 14 ஃபெரே, காகஸ், ராதே : யுவர் மோஸ்ட் வாண்டட் பாய், ஹிஸ் ஸ்டோரி, க்ஹோஜ் ஒரிஜினல், லாகூர் காண்பிடென்ஷியல், சைலன்ஸ்...கேன் யு ஹியர் இட்? மற்றும் நெயில் பாலிஷ் போன்றவைகளும் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட ஒளிபரப்பாகிறது. விக்ரந்த் மேஸ்சே மற்றும் க்ருதி கர்பந்தா நடித்த காதல் பொழுதுபோக்கு ஹிந்தி திரைப்படமான 14 ஃபெரே, டபுள் கல்யாணம் என்ற தலைப்பில் தமிழிலும் தெலுகுவிலும் டப் செய்யப்பட்டு வெளியிடபடுகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இதைதவிர மக்களின் நகைச்சுவை உணர்விற்கு தீனி போட மெண்டல் ஹுட், பிட்செர்ஸ், ட்ரிப்லிங், ஹ்யுமரச்லி யுவர்ஸ், தி ஆம் ஆத்மி பேமலி, மற்றும் பர்மனென்ட் ரூம்மேட்ஸ் போன்றவைகளும் காத்திருக்கின்றன. வாடிக்கையாளர்கள் ZEE5 ஆப்பை கூகிள் ப்ளேஸ்டோர் / ஐஒஎஸ் ஆப் ஸ்டோரில் டௌன்லோட் செய்து, ரோகு கருவிகள், சாம்சங் ஸ்மார்ட் டிவி, ஆப்பிள் டிவி, ஆன்ராய்ட் டிவி மற்றும் அமேசான் பயர் ஸ்டிக் போன்றவை மூலம் கண்டு ரசிக்கலாம். ZEE5 யை www.ZEE5.com இணையத்தளத்திலும் பார்த்துக்கொள்ளலாம்.

Next Story