உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு


உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 11:52 AM GMT (Updated: 2021-08-11T17:22:23+05:30)

இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன் காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று விமர்சனங்கள் வந்தன. குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள் வருந்துகின்றனர்.

ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும் செய்வேன். இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை குறைக்கவில்லை’' என்றார்.

Next Story