சினிமா செய்திகள்

அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகியான அனிகா + "||" + Ajith's daughter is played by the heroine Anika

அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகியான அனிகா

அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகியான அனிகா
அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகியான அனிகா.
குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக வந்தார். விஸ்வாசம் படத்தில் அஜித்குமாரின் மகளாக நடித்து இருந்தார்.


ஜெயலலிதா வாழ்க்கை கதையாக வெளியான குயின் வெப் தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து இருந்தார். தற்போது வளர்ந்துள்ள அனிகா சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தார்.

இந்த நிலையில் அனிகா தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மலையாளத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மேத்தியூ ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க அனிகாவை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபோல் நாகார்ஜுனாவுடன் இணைந்தும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் முயற்சி செய்கிறார். அனிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.