சினிமா செய்திகள்

வட மாநிலத்தில் எதிர்ப்பு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம் + "||" + Protest in the Northern State Of Rajini Annatha shooting stop

வட மாநிலத்தில் எதிர்ப்பு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

வட மாநிலத்தில் எதிர்ப்பு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்
அண்ணாத்த படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே தனது காட்சிகளை ரஜினி முடித்து கொடுத்துவிட்டார்.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே தனது காட்சிகளை ரஜினி முடித்து கொடுத்துவிட்டார். மற்ற நடிகர்கள் காட்சிகள் பாக்கி உள்ளதால் அதை படமாக்கும் பணிகள் வட மாநிலங்களில் நடந்து வருகின்றன.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஷியா முஸ்லிம்களின் புனித தலமான வரலாற்று சிறப்புமிக்க இமாம்பாடாவில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் ரஜினிகாந்த் வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், அவரை காணும் ஆர்வத்திலும் அங்கு கூடினார்கள்.

அதிகமாக கூட்டம் கூடியதால் படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. சிலர் படக்குழுவினரை முற்றுகையிட்டு படப்பிடிப்பை நிறுத்தும்படி கோஷம் எழுப்பினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

எதிர்ப்பாளர்கள் கூறும்போது, “கொரோனா பரவல் காலத்தில் படப்பிடிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. படப்பிடிப்புக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்றும் புரியவில்லை'' என்றனர். எதிர்ப்பு காரணமாக படப்பிடிப்பை வேறு இடத்துக்கு மாற்றலாமா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.