மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி


மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 13 Aug 2021 4:22 AM GMT (Updated: 2021-08-13T09:52:45+05:30)

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் மற்ற கதாநாயகர்கள் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா படத்தில் வில்லனாக வந்தார். ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார்.

விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

விஜய்சேதுபதி கைவசம் தற்போது 12 படங்கள் உள்ளன. தியேட்டர்கள் திறந்ததும் இவைஅடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

Next Story