24 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்குகள்; வைரல் ஹிட் அடித்த விஜய் - தோனி புகைப்படம்


24 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்குகள்;  வைரல் ஹிட் அடித்த விஜய் - தோனி புகைப்படம்
x
தினத்தந்தி 13 Aug 2021 9:34 AM GMT (Updated: 2021-08-13T15:04:43+05:30)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விஜய்- தோனி சந்திப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது.

கொரோனாவால் பாதியில் நின்றுபோன ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கும் சூழலில், தொடருக்கு தயாராவதற்காக சென்னை வந்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி. இதையடுத்து சென்னையில் அவர் வந்து இறங்கிய புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த சூழலில் விளம்பர படப்பிடிப்பிற்காக கோகுலம் ஸ்டூடியோவிற்கு தோனி விசிட் அடிக்க, அங்கு ஏற்கனவே பீஸ்ட் படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடிகர் விஜய் இருந்துள்ளார்.  அப்போது தோனி வருகையை அறிந்த விஜய், அவரை நேரில் சென்று சந்தித்து, கேரவனுக்கு அழைத்து சென்று கலந்துரையாடினார்.  அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் சந்தித்த  புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விஜய்- தோனி சந்திப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் 24 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது.

Next Story