சினிமா செய்திகள்

இந்தியில் ‘ஒத்த செருப்பு' பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சன் + "||" + Otha Seruppu in Hindi Parthiban will act in the motion Abhishek Bachchan

இந்தியில் ‘ஒத்த செருப்பு' பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சன்

இந்தியில் ‘ஒத்த செருப்பு' பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சன்
படத்தில் இடம்பெற்ற புதுமைகளை திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டினார்கள். இந்த படம் தேசிய விருதை பெற்றது.
பார்த்திபன் இயக்கத்தில் 2019-ல் வெளியான ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருந்தார். வேறு கதாபாத்திரங்கள் இல்லை.

படத்தில் இடம்பெற்ற புதுமைகளை திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டினார்கள். இந்த படம் தேசிய விருதை பெற்றது. உலக பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது.

ஒத்த செருப்பு படத்தை, இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக்பச்சனிடம் பேசி வருவதாகவும் பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த படத்தில் நடிக்க அபிஷேக் பச்சன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். பார்த்திபன் இயக்குகிறார். பார்த்திபனுக்கும், அபிஷேக்பச்சனுக்கும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.