ராதிகா ஆப்தேவுக்கு எதிராக திடீர் போராட்டம்!


ராதிகா ஆப்தேவுக்கு எதிராக திடீர் போராட்டம்!
x
தினத்தந்தி 15 Aug 2021 8:01 AM GMT (Updated: 2021-08-15T13:31:25+05:30)

‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டுவிட்டரில் திடீர் போராட்டம் வெடித்து இருக்கிறது. அவரை கண்டித்து டுவிட்டரில் எதிர்ப்பு பிரசாரம் நடைபெறுகிறது.

நாட்டு நடப்புகள் பற்றி கருத்து தெரிவிக்கும் நடிகர்-நடிகைகள், சமீபத்தில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டது தொடர்பாக ஷில்பா செட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவர்களின் கோபம் இப்போது, ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தே பக்கமும் திரும்பி இருக்கிறது. இவர், ‘பர்சாட்’ என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து இருந்தார். ‘‘அந்த கதைக்கு நிர்வாண காட்சி தேவைப்பட்டது. அதனால் நடித்தேன்’’ என்று அவர் விளக்கம் சொல்லியிருந்தார்.

‘‘என் உடல், என் உரிமை, என் நிர்வாணம். எனக்கு பிடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்’’ என்று கர்வமாக பேட்டியும் அளித்து இருந்தார். இது, ரசிகர்களின் கோபத்தை மேலும் தூண்டியிருக்கிறது. ‘‘ராதிகா ஆப்தே போன்றவர்களால் இந்தியாவின் கலாசாரமும், பண்பாடும் அழிக்கப்படுகிறது. அவரை எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்’’ என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Next Story