சுடுகாட்டில் நடந்த படப்பிடிப்பும், நடிக்க பயந்த முன்னாள் நாயகியும்!

முன்பெல்லாம் பேய் படங்கள் என்றால் தியேட்டர்களில் பயங்கர நிசப்தம் நிலவும். பார்வையாளர்கள் பயந்து கொண்டே படம் பார்ப்பார்கள்.
இப்போது பேய் படங்கள் என்றாலே வயிறு வலிக்க சிரிக்கிறார்கள். கொடூர பேய்கள், சிரிப்பு பேய்களாக மாறிவிட்டதுதான் காரணம்.
இதற்கு உபயதாரர், லாரன்ஸ். திகிலையும், நகைச்சுவையையும் சரிசமமாக கலந்து கொடுத்துக்கொண்டிருக்கும் நாட்டு வைத்தியர் இவர்தான். பேய் படங்களை பார்த்து பயந்து நடுங்கியது, அந்தக்காலம் ஆகிவிட்டது. சரி, மேட்டருக்கு வருவோம்.
லாரன்ஸ் நடிக்கும் புதிய பேய் படம், ‘ருத்ரன்.’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அமாவாசை அன்று இரவில், ஒரு சுடுகாட்டில் நடந்தது. லாரன்ஸ் நடிக்கும் காட்சிகளை டைரக்டர் கதிரேசன் இயக்கிக்கொண்டிருந்தார். வழக்கமாக லாரன்சுக்கு அம்மாவாக கோவை சரளாதான் நடிப்பார். இந்த படத்தில் அவர் இல்லை.
அம்மா வேடத்துக்கு ஒரு முன்னாள் கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இரவு 8 மணிக்கு அவருக்கு கால்சீட். சரியான நேரத்துக்கு அவருடைய கார் சுடுகாட்டுக்குள் நுழைந்தது. காரை விட்டு இறங்கிய அவர், கல்லறைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ‘‘இங்கேயா சூட்டிங்...விடிய விடிய இங்கேயே இருக்கணுமா?’’ என்று சுடுகாட்டுக்குள் நடிக்க பயந்தாராம்.
மறுநாள், சுடுகாடு போல் ஒரு ‘செட்’டை போட்டு, படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அமாவாசை இருட்டு இல்லாமல், பூரண நிலவு வெளிச்சமாக இருந்ததால், அந்த முன்னாள் நாயகி பயமின்றி நடித்து இருப்பாரோ...?
Related Tags :
Next Story