நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!


நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!
x
தினத்தந்தி 15 Aug 2021 9:30 AM GMT (Updated: 2021-08-15T15:00:37+05:30)

கொச்சியில் நடந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்து விட்டார்.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த சில வருடங்களாக காதல் இருந்து வருகிறது. இருவரும் சென்னை எழும்பூரில் உள்ள ஆடம்பரமான சொகுசு குடியிருப்பில் ஜோடியாக வசித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாராவின் தந்தை குரியனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் படுத்த படுக்கையாக இருப்பதாக பேசப்படுகிறது. மகள் திருமணத்தை பார்க்க அவர் ஆசைப்படுகிறார். அதன் விளைவுதான், நிச்சயதார்த்தம். அந்த நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். குரியன் முன்னிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.

அப்போது இருவருக்கும் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் (செப்டம்பர்) நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும் நயன்தாரா மும்பைக்கு பறந்து விட்டார். ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் இந்தி படப்பிடிப்பில், அவர் கலந்து கொண்டார்.

Next Story