வீரப்பன் கதையில் யோகிபாபு?


வீரப்பன் கதையில் யோகிபாபு?
x
தினத்தந்தி 16 Aug 2021 8:24 AM GMT (Updated: 2021-08-16T13:54:25+05:30)

தமிழ் திரையுலகில் வடிவேல், சந்தானத்தை தொடர்ந்து நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறக்கும் யோகிபாபு கைவசம் இப்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

தமிழ் திரையுலகில் வடிவேல், சந்தானத்தை தொடர்ந்து நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறக்கும் யோகிபாபு கைவசம் இப்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்பதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார். சம்பளத்தையும் கூட்டி உள்ளார். இந்த நிலையில் யோகிபாபு ‘வீரப்பன் கஜானா' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் யோகிபாபுவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த போஸ்டரில் சந்தன கடத்தல் வீரப்பன் புகைப்படமும், துப்பாக்கி குண்டுகளும் உள்ளன. இதனால் இது வீரப்பன் வாழ்க்கை கதையா? அல்லது வீரப்பனை கேலி செய்யும் படமா? என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். காட்டுக்குள் வீரப்பன் பணத்தை புதைத்து வைத்து இருக்கலாம் என்று ஏற்கனவே யூகங்கள் கிளம்பின. அந்த பணத்தை யோகிபாபுவும், வில்லன்களும் தேடி செல்வதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை யாஷ் இயக்குகிறார். மொட்டை ராஜேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Next Story