சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் மவுனப்படம் + "||" + Silence by Vijay Sethupathi

விஜய் சேதுபதியின் மவுனப்படம்

விஜய் சேதுபதியின் மவுனப்படம்
விஜய்சேதுபதி காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன.
விஜய்சேதுபதி காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வந்த மவுன படமாகும். இந்த படத்தை தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிட்டனர். 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காந்தி டாக்ஸ் மவுன படம் உருவாகிறது. இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அதிதிராவிடம் பேசி வருகிறார்கள்.


விஜய்சேதுபதி ஏற்கனவே மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆக தயாராகும் மும்பைக்கார் படத்தில் நடித்து வருகிறார். ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகும் இந்தி வெப் தொடரிலும் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதியின் ‘மால்’
விஜய் சேதுபதி 10 மாடிகளை கொண்ட பிரமாண்டமான ‘மால்’ ஒன்றை கூடுவாஞ்சேரியில் கட்டுகிறார்.
2. ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
3. விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா படம் இந்தியில் ‘ரீமேக்'
தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
4. விஜய் சேதுபதியின் 46-வது படம்
விஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.