சினிமா செய்திகள்

சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Actress Aishwarya Rajesh is struggling for a career in cinema

சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன். படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்வார். எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பாலியல் ரீதியாக எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து கொடூரமாக கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டமாகத்தான் உள்ளது.''


இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’- நடிகை ரோஜா பேட்டி
ஆந்திர மந்திரி சபை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரோஜா சுற்றுலாத்துறை மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
2. பள்ளி பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
3. 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான இயல்பு வாழ்க்கை!
தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கொரோனா காலடி எடுத்துவைத்தது.
4. பிபின் ராவத் மரணம் குறித்த விமர்சனத்துக்கு கண்டனம்- இந்து மதத்துக்கு மாறிய மலையாள சினிமா இயக்குனர்
எதிர்மறையாக கருத்து கூறி வருபவர்களுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காதது தன்னை காயப்படுத்தியதாக இயக்குனர் அலி அக்பர் தெரிவித்தார்.