சினிமா செய்திகள்

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் மரணம் + "||" + Popular VJ Anandha Kannan passed away, #RIPanandakannan trending on social media

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் மரணம்

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் மரணம்
பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆனந்த கண்ணன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில், “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் பலர் #RIPanandakannan என்ற ஹேஸ்டேகில் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.