ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படம் வைரல்


ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படம் வைரல்
x
தினத்தந்தி 17 Aug 2021 3:16 AM GMT (Updated: 2021-08-17T08:46:23+05:30)

ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படம் வைரல்.

குடும்ப பாங்காகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மற்றும் காதல் காட்சிகளிலும் நடித்து வரும் ஹன்சிகா திடீரென்று நீச்சல் உடையில் இருக்கும் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்து இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். தண்ணீருக்கு அடிமையாகி விட்டேன் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். ஹன்சிகாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஹன்சிகாவின் 50-வது படமான மஹா விரைவில் திரைக்கு வர உள்ளது. திகில் கதையான 105 மினிட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கைவிலங்குடன் இருக்கும் அவரது தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படுவதும் ஹன்சிகா மட்டுமே நடிப்பதும் விசேஷம்.


Next Story