சினிமா செய்திகள்

தமிழில் வரும் மம்முட்டி படம் + "||" + Mammootty movie coming in Tamil

தமிழில் வரும் மம்முட்டி படம்

தமிழில் வரும் மம்முட்டி படம்
தமிழில் வரும் மம்முட்டி படம்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ஒன் மலையாள படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.


சீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். சந்தோஷ் விஸ்வநாத் இயக்கினார். பினராயி விஜயனின் சமூக, அரசியல் வாழ்க்கையை படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் ஒன் படத்தை தமிழிலும் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. தியேட்டர்கள் திறந்ததும் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒன் படம் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அதிலும் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’
எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’.
2. சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் பல மாதங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.
3. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் நடிகர் மம்முட்டி நெகிழ்ச்சி
கடந்த 7-ந்தேதி மம்முட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
4. சூர்யாவின் புதிய படம்
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரை போற்று படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
5. மணிரத்னம், ஷங்கர் உள்பட 11 டைரக்டர்கள் தயாரிக்கும் படம்
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டர்களாக உள்ள மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர்.