சினிமா செய்திகள்

திருமணமாகியும் படவாய்ப்புகள் காஜல் அகர்வால் மகிழ்ச்சி + "||" + Kajal Agarwal happy to get married

திருமணமாகியும் படவாய்ப்புகள் காஜல் அகர்வால் மகிழ்ச்சி

திருமணமாகியும் படவாய்ப்புகள் காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார்.
காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் குறையாமல் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன.

காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகும் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. இது மகிழ்ச்சியாக உள்ளது. கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் திருமணத்துக்கு பிறகு ஓய்வு எடுத்து கணவருடன் சுற்ற முடியவில்லை. இது வருத்தமாக உள்ளது. சமீபத்தில் ஆடி மாதத்தில் கணவர் ஆரோக்கியமாக இருக்க பூஜைகள் செய்யும் பண்டிகையை கொண்டாடினேன்.


தற்போது தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி, தெலுங்கில் உமா ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டேன். சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் நாகர்ஜுனா படங்களில் நடித்து வருகிறேன். நான் நடிப்பு தொழிலை நேசிக்கிறேன். அதை வேலை மாதிரி செய்யாமல் மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருங்கள்!
மனதை ஆழ்த்தும் துயரம் இருந்தால் உண்ணவோ, உறங்கவோ, சிரிக்கவோ தோன்றாது. கவலையில் இருக்கும்போது, மனது தவறான முடிவுகளைத் தேடும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்க்க முயலுங்கள்.
2. கணவரைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்
திருமணத்திற்கு முன்பே இருவரின் எதிர்காலக் கனவுகள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என அனைத்து விஷயங்களையும் பேசி, தெளிவு படுத்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
3. நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்..!
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
4. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 7 ரகசியங்கள்
விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் கடந்து செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாகத் தெரிந்தாலும், தொடர்ந்து செய்யும்போது எளிதாகிவிடும்.
5. காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.