தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவு


தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவு
x
தினத்தந்தி 18 Aug 2021 3:15 AM GMT (Updated: 2021-08-18T08:45:07+05:30)

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவு.

தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (செப்டம்பர்) தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் நிற்கிறார்கள்.

கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் போட்டியிடக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர். பிரகாஷ் ராஜும் “நான் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தபோது யாரும் கன்னடர் என்று கேள்வி எழுப்பவில்லை. தெலுங்கு நடிகர்கள் மேம்பாட்டுக்கு பாடுபடவே தேர்தலில் நிற்கிறேன்'' என்றார். சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் ராஜ் தற்போது குணமடைந்துள்ள நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசினார். தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் மூலம் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

Next Story