சினிமா செய்திகள்

விஜய் படத்தில் புதுமுக நடிகை + "||" + Newcomer actress in Vijay movie

விஜய் படத்தில் புதுமுக நடிகை

விஜய் படத்தில் புதுமுக நடிகை
விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தற்போது சென்னை பூந்தமல்லி அருகே நடந்து வரும் பீஸ்ட் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


தமிழ் படங்களில் தொடர்ந்து புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த பட்டியலில் புதிய வரவாக அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். இவர் எம்.பி.ஏ பட்டதாரி டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி மலையாளத்தில் அந்திக்காடு என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மனோகரம் என்ற மலையாள படத்தில் கதாநாயகியானார். இப்போது தமிழ் படத்திலும் அறிமுகமாகி உள்ளார்.

பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், மலையாள நடிகர் ஷன் டாம் சாக்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் டவுட் கேட்ட பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகை ஒருவர் டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் நிறைய டவுட் கேட்டு இருக்கிறார்.
2. பாடகரை மணக்கும் நடிகை
தமிழில் ஓவியாவுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தேவிகா நம்பியார்.
3. பண கஷ்டத்தை சந்தித்த நடிகை
தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் வாணி கபூர்.
4. விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
5. திருமணத்தை தனுஷ் பட நடிகை நிறுத்தியது ஏன்?
தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரீன், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.