சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி தீவிர பயிற்சியில் அஜித் + "||" + Ajith in sniper competition intensive training

துப்பாக்கி சுடும் போட்டி தீவிர பயிற்சியில் அஜித்

துப்பாக்கி சுடும் போட்டி தீவிர பயிற்சியில் அஜித்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இதனால் தினமும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
அஜித்குமார் நடிப்பதோடு, இன்னொரு புறம் சமையல் செய்வது, பைக், கார் பந்தயங்கள், டிரோன் வடிவமைப்பது என்றெல்லாம் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

படப்பிடிப்பு குழுவினருக்கு அவரே பல முறை பிரியாணி செய்து பரிமாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. அஜித்குமார் வடிவமைத்த டிரோன் பரிசுகள் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்தி உள்ளனர்.

படப்பிடிப்பு ஓய்வில் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் பங்கேற்று 6 பதக்கங்களை வென்றார். அதை ரசிகர்கள் கொண்டாடினார்கள். வலிமை படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அஜித்குமார் விரைவில் நடக்க உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தினமும் இந்த பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வலிமை படம் ரிலீசுக்கு முன்பு தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே துப்பாக்கி சுடும் போட்டி
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் நேற்று நடந்தது.
2. நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
தூத்துக்குடி வல்லநாட்டில் நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
3. புதிய படத்துக்கு தயாராகும் அஜித்
அஜித்குமாரின் ‘வலிமை’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
4. தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்
தமிழக சட்ட சபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.