நயன்தாரா படம் தெலுங்கில் ரீமேக்


நயன்தாரா படம் தெலுங்கில் ரீமேக்
x
தினத்தந்தி 19 Aug 2021 2:47 PM GMT (Updated: 2021-08-19T20:17:12+05:30)

நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ‘பிளைண்ட்’ என்ற கொரிய படத்தின் ரீமேக்காக தயாரான இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்து இருந்தார்.

அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து நெற்றிக்கண் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஏற்கனவே சைலன்ஸ் படத்தில் அனுஷ்கா வாய்பேசாத மாற்றுத்திறனாளியாக நடித்து இருந்தார். நெற்றிக்கண் கதை அனுஷ்காவுக்கு பிடித்து உள்ளதாகவும் எனவே அவர் நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து முடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

Next Story