சினிமா செய்திகள்

சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு + "||" + Opposition to Kareena Kapoor asking for Rs 12 crore to act as Sita

சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு

சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு
ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இதற்கு வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கரீனா கபூர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கரீனா கபூர் தனது மகனுக்கு தைமூர் என்று பெயர் வைத்தும் பிரசவ கால அனுபவங்களை பிரெக்னன்ஸி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டும் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் அதிக பொருட் செலவில் தயாராக உள்ள ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனாகபூரை அணுகியதாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்திவிட்டதாக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். கரீனா கபூரிடம் சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை. இந்த பிரச்சினையில் நடிகைகள் டாப்சி, பிரியாமணி ஆகியோர் கரீனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.