சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய படம் + "||" + Vijay's new film

விஜய்யின் புதிய படம்

விஜய்யின் புதிய படம்
விஜய்யின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.
விஜய் பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிக்கும் படம் பற்றிய எதிர்பார்ப்பும், டைரக்டர் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்த விஜய் சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்கிறார். முந்தைய விஜய் படங்களான பிகில் அட்லி இயக்கத்திலும், மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனிலும் வந்தன. பீஸ்ட் படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார்.

இந்த படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த ரஜினிகாந்தும், தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டியதுடன் தனக்கு கதை தயார் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் விஜய்யை சந்தித்து தேசிங்கு பெரியசாமி அதிரடி கதை ஒன்றை சொன்னதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், எனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.