ரூ.3.16 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய நடிகர்


ரூ.3.16 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய நடிகர்
x
தினத்தந்தி 19 Aug 2021 3:43 PM GMT (Updated: 2021-08-19T21:13:50+05:30)

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் ரூ.3.16 கோடிக்கு சொகுசு காரை வாங்கி இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவரிடம் விலை உயர்ந்த கார்கள் உள்ளன.

இந்த நிலையில் ரூ.3.16 கோடிக்கு லம்போர்கினி உருஸ் கிராபைட்டி கேப்சுல் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இந்தியாவில் இந்த காரை வாங்கி உள்ள முதல் நபர் ஜூனியர் என்.டி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்புக்காக ரஷியா சென்றுள்ளதால் காரை உடனே ஓட்டிப்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார். தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உங்களில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூனியர் என்.டி.ஆரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு அவருக்கு பல கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் சில சீசன்களை தவிர அனைத்தையும் அமிதாப்பச்சனே தொகுத்து வழங்கி வருகிறார்.

Next Story