பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த கார்த்தி, பிரகாஷ்ராஜ்


பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த கார்த்தி, பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 19 Aug 2021 4:05 PM GMT (Updated: 2021-08-19T21:35:23+05:30)

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக சென்ற பிரகாஷ்ராஜ், கார்த்தியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடந்தது. தற்போது படக்குழுவினர் குவாலியர் சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், ஓர்ச்சா பாரம்பரிய நகரங்களாகும். இங்கு அரண்மனைகளும், கோவில்களும் உயரமான கோட்டை சுவர்கள் மற்றும் சிற்பங்களும் உள்ளன.

இந்த பகுதிகளில் பொன்னியின் செல்வன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர். படப்பிடிப்புக்காக சென்ற பிரகாஷ்ராஜ் குவாலியர் விமான நிலையத்தில் கார்த்தியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு இருவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.

படத்தில் வந்திய தேவனாக கார்த்தியும், சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜும் நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இதில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

Next Story