சினிமா செய்திகள்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு ...! + "||" + With Puducherry First-Minister Rangasamy Actor Vijay Sethupathi meets suddenly ...!

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு ...!

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன்  நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு ...!
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன.
சென்னை, 

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது.  புதுச்சேரியில் தங்கியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி நேற்று மாலை  முதல்-அமைச்சர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். 

அந்த சந்திப்பில் படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணம் குறைப்பது குறித்து அவர் கோரிக்கை வைத்தார். முன்னதாக, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு ஒருநாள் கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ. 28,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்தார். 

இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி இது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. "தோத்த காண்டு மொத்தத்தையும் பாட்டுல இறக்கிட்டாப்ல...!" - கமலின் புதிய பாடல் குறித்து கஸ்தூரி
கமல்ஹாசன் விக்ரம் படத்தில் வரும் 'பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
3. என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்...! பிரபல நடிகர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்
நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்று தான் தனது மகளை நடிகையாக மாற்றினார் என்று பிக் பாஸ் பிரபலம் பூஜா மிஸ்ரா, பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
4. என்னை விட 3 வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள்- கமல்ஹாசன் முன்னாள் மனைவி
என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என கமல்ஹாசன் முன்னாள் மனைவி வேதனையுடன் கூறி உள்ளார்.
5. ஊரடங்கின் போது ரூ. 2 ஆயிரத்திற்கு வேலை செய்தேன் - நடிகை சரிகா வேதனை
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்கு திரும்பிய சரிகா, கொரோனா தொற்று ஊரடங்கின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூறி உள்ளார்.