சினிமா செய்திகள்

வம்ஷி இயக்கத்தில் அடுத்த படத்துக்கு நடிகர் விஜய் சம்பளம் ரூ.120 கோடி + "||" + Actor Vijay has a salary of Rs 120 crore for his next film directed by Vamsi

வம்ஷி இயக்கத்தில் அடுத்த படத்துக்கு நடிகர் விஜய் சம்பளம் ரூ.120 கோடி

வம்ஷி இயக்கத்தில் அடுத்த படத்துக்கு நடிகர் விஜய் சம்பளம் ரூ.120 கோடி
வம்ஷி இயக்கத்தில் அடுத்த படத்துக்கு நடிகர் விஜய் சம்பளம் ரூ.120 கோடி வாங்குகிறார். இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.
விஜய் தற்போது தனது 65-வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு ‘பீஸ்ட்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார். படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை போல் தெரியவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்ததின் காரணமாக, படத்தின் பெயரை மாற்றலாமா? என்று யோசித்து வருகிறார்கள். 

இந்தநிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி டைரக்டு செய்கிறார். 

இந்த படத்துக்கு விஜய் சம்பளம் ரூ.120 கோடி. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.