சினிமா செய்திகள்

‘பதினெட்டாம்படி’, ‘லோக்கல் பாய்ஸ்’ ஆகிறது + "||" + ‘Eighteenth’ is ‘Local Boys’

‘பதினெட்டாம்படி’, ‘லோக்கல் பாய்ஸ்’ ஆகிறது

‘பதினெட்டாம்படி’, ‘லோக்கல் பாய்ஸ்’ ஆகிறது
‘பதினெட்டாம்படி’ என்ற மலையாள படம் தமிழில், ‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கான்வென்ட் பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கருவாக வைத்து, ‘பதினெட்டாம்படி’ என்ற பெயரில், ஒரு மலையாள படம் தயாரானது.

இந்தப் படத்தில் ஆர்யா பள்ளிக்கூட மாணவராக நடித்து இருக்கிறார். அவருடன் மம்முட்டி, பிருத்விராஜ், பிரியாமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். படம் தமிழில், ‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழில் வசனம் எழுதியிருப்பவர், ஏ.ஆர்.கே.ராஜராஜா. படத்தை இயக்கியிருப்பவர், சங்கர் ராமகிருஷ்ணன். ரசி மீடியா மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. படம் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.