லிங்குசாமியின் இந்தி படம் ரூ.16 கோடிக்கு விற்பனை


லிங்குசாமியின் இந்தி படம் ரூ.16 கோடிக்கு விற்பனை
x
தினத்தந்தி 20 Aug 2021 4:25 PM GMT (Updated: 2021-08-20T21:55:33+05:30)

லிங்குசாமியின் ‘ரேபோ 19’ இந்தி படம் ரூ.16 கோடிக்கு விற்பனையானது.

ஆனந்தம், சண்டக்கோழி, ரன், பையா, வேட்டை, அஞ்சான் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர் லிங்குசாமி. இவர் தற்போது தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ‘ரேபோ 19’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

தெலுங்கு பட உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிருகம், ஈரம், அரவான் ஆகிய படங்களில் நடித்த ஆதி, வில்லனாக நடிக்கிறார்.

லிங்குசாமி, ராம் பொத்தினேனி, ஆதி ஆகிய மூன்று பேர் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி ‘சாட்டிலைட்’ உரிமையை அதிக விலை (ரூ.16 கோடி) கொடுத்து, ஒரு தனியார் டி.வி. வாங்கியிருக்கிறது. இது, இந்தி பட உலகில் ஒரு புதிய சாதனை.

Next Story