சினிமா செய்திகள்

பாலியல் தொழிலுக்கு குழந்தைகள் கடத்தல் பற்றிய படம் + "||" + A film about child trafficking into the sex industry

பாலியல் தொழிலுக்கு குழந்தைகள் கடத்தல் பற்றிய படம்

பாலியல் தொழிலுக்கு குழந்தைகள் கடத்தல் பற்றிய படம்
பாலியல் தொழிலுக்கு பெண் குழந்தைகள் கடத்தி விற்கப்படும் கொடூரம் பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘கிரீன் சில்லீஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். பல படங்களை இயக்கி தயாரித்த சஞ்சய்ராம், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா என்ற ஆட்டோக்காரருக்கும், அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தை யமுனாவுக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடே, ‘கிரீன் சில்லீஸ்.’

இதில் ஆட்டோ ஓட்டும் நந்தாவாக லெனின் அறிமுகமாகிறார். இவருடைய முறைப்பெண்ணாக ககன தீபிகாவும், விலைமாது மகியாக டெல்லியைச் சேர்ந்த திவ்யாங்கனா, சாய்குமாரின் பேத்தி நந்தனா தும்பி, குழந்தைகளை கடத்தி விற்பவராக சாப்ளின் பாலுவும் நடித்து இருக்கிறார்கள்.

மன்மதன் என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நான் நடித்து இயக்கி இருக்கிறேன். நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆலப்புழா ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.’’