மாஸ்டர் இந்தி ரீமேக்: சல்மான்கான் விலகல்


மாஸ்டர் இந்தி ரீமேக்: சல்மான்கான் விலகல்
x
தினத்தந்தி 21 Aug 2021 1:09 AM GMT (Updated: 2021-08-21T06:39:26+05:30)

மாஸ்டர் இந்தி ரீமேக்: சல்மான்கான் விலகல்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். மாளவிகா மோகனன், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான்கான் சம்மதம் தெரிவித்ததுடன் கதையில் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி சிறிது மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி கதையை மாற்றி எழுதி உள்ளனர். அந்த கதையை படித்த சல்மான்கான் தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறி படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான்கான் கைவசம் 3 படங்கள் உள்ளன. அவற்றில் தொடர்ச்சியாக நடிப்பதும் விலகலுக்கு காரணம் என்கின்றனர்.

இதனால் சல்மான்கானுக்கு பதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள்.


Next Story