மெல்போர்ன் திரைப்பட விழா சூர்யா, சமந்தாவுக்கு விருது


மெல்போர்ன் திரைப்பட விழா சூர்யா, சமந்தாவுக்கு விருது
x
தினத்தந்தி 21 Aug 2021 1:12 AM GMT (Updated: 2021-08-21T06:42:13+05:30)

மெல்போர்ன் திரைப்பட விழா சூர்யா, சமந்தாவுக்கு விருது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து தமிழில் சூரரை போற்று, சேத்துமான், நஸீர், மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன், இந்தியில் ஷெர்னி உள்பட பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

கொரோனாவால் ஆஸ்திரேலிய எல்லைகள் மூடி உள்ளதால் ஆன்லைன் மூலம் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரை போற்று படத்துக்கு சிறந்த படத்திற்கான விருதும், அதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளன.

சூரரை போற்று படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி இருந்தது. சூர்யா விருது பெற்றதை தொடர்ந்து டுவிட்டரில் சூரரை போற்று ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதுபோல் சிறந்த நடிகைகள் விருது ஷெர்னி இந்தி படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும், தி பேமிலிமேன்-2 வெப் தொடரில் நடித்த சமந்தாவுக்கும் கிடைத்துள்ளன.


Next Story