சினிமா செய்திகள்

கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால் + "||" + Actor Vishal will pay Rs 5 lakh for education assistance imposed by the court

கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்

கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்
கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்.
நடிகர் விஷாலுக்கு எதிரான கடன் தொகை வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் ரூ.5 லட்சம் வழக்கு செலவாக அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த ரூ.5 லட்சம் அபராத தொகையை பெற்று மாணவ மாணவிகள் கல்வி செலவுக்கு வழங்கப் போவதாக நடிகர் விஷால் அறிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் விதித்துள்ள ரூ.5 லட்சம் தொகை தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக செலவு செய்யப்படும்'' என்றார்.


விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஆர்யா வில்லனாக வருகிறார். அடுத்து து.ப.சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். துப்பறிவாளன் 2-ம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் ரூ.30 கோடி பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்
வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்ததும் கூட்டாக தெரிவித்தனர்.
2. விஷால் உடை அலங்காரத்தில் கவனம் செலுத்தாதது ஏன்?
‘மார்க் ஆண்டனி' பட விழாவில் நடிகர் விஷால் அணிந்து வந்த உடை குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
3. பாலியல் புகார் எதிரொலி- திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து மலையாள நடிகர் விலகல்
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் விஜய் பாபு மீது போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.
4. சிறிது காலம் விலகுகிறேன்.. அறிவித்த விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் சிறிது காலம் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
5. பீஸ்ட் - கேஜிஎஃப் படங்களை ஓப்பிடுவதே தவறு - நடிகர் ஆரி காட்டம்
சமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கேஜிஎஃப் - பீஸ்ட் படங்களை ஒப்பிடாதீர்கள் என்று நடிகர் ஆரி காட்டமாக பேசியுள்ளார்.