புதிய படத்தில் இணைந்து நடிக்கும் கமல், சூர்யா?


புதிய படத்தில் இணைந்து நடிக்கும் கமல், சூர்யா?
x
தினத்தந்தி 21 Aug 2021 1:17 AM GMT (Updated: 2021-08-21T06:47:45+05:30)

இளம் கதாநாயகர்கள் சமீப காலமாக ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இமேஜ் பார்க்காமல் வில்லன்களாகவும் நடிக்கின்றனர்.

இளம் கதாநாயகர்கள் சமீப காலமாக ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இமேஜ் பார்க்காமல் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். இது சினிமா துறையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனும், சூர்யாவும் பிரபல மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அமல் நீரத் அளித்துள்ள பேட்டியில், “கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து புதிய திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இருவரிடமும் இதனை தெரிவித்து விட்டேன். அவர்களும் சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர். தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன’’ என்று தெரிவித்து உள்ளார்.

இந்த தகவலை இருவரின் ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள். விரைவில் கமல்ஹாசனையும், சூர்யாவையும் சந்தித்து முழு கதையையும் சொல்ல அமல் நீரத் திட்டமிட்டு இருப்பதாகவும் கதை பிடித்து இருந்தால் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கமல்ஹாசனை தனது குருவாகவே சூர்யா பாவித்து வருகிறார். எனவே அவருக்கு கமலுடன் இணைந்து நடிக்க ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. அமல்நீரத் தற்போது மம்முட்டி நடிக்கும் பீஷ்மா பர்வம் என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார்.

Next Story