‘‘சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான்!’’- ஓவியா


‘‘சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான்!’’- ஓவியா
x
தினத்தந்தி 22 Aug 2021 2:41 PM GMT (Updated: 22 Aug 2021 2:41 PM GMT)

‘‘சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான்!’’ என்று நடிகை ஓவியா அளித்த பேட்டியில் தெரிந்தார்.

‘களவாணி’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், ஓவியா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அவரிடம்,

‘‘தமிழ் பட உலகில் ஆணாதிக்கம் இருப்பது உண்மையா?’’ என்று கேட்கப்பட்டது.

‘‘தமிழ் பட உலகில் மட்டுமல்ல. எல்லா பட உலகிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ் பட உலகில் குறைவாகவே இருக்கிறது. மற்ற பட உலகில் நிறைய இருக்கிறது. பெண்களுக்கு எதிரானவை ஏராளமாக உள்ளன.’’

‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் எப்படி பொழுதை கழித்தீர்கள்?’’

‘‘எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும். ‘லாக் டவுனில்’ நிறைய சமைக்க கற்றுக்கொண்டேன். எங்க வீட்டில் நான், அப்பா, ஒரு நாய்க்குட்டி ஆகிய மூன்று பேர்தான். சின்ன குடும்பம். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.’’

‘‘அம்மா இல்லாதது உங்களை நிறையவே பாதிப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள்...?’’

‘‘ஆமாம். எங்க வீட்டில் அம்மா இல்லாதது ஒரு வெற்றிடமாகி விட்டது. எனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும். என்றாலும் அம்மாவிடம் பங்கிடுபவைகளை அப்பாவிடம் பங்கிட முடியாதே...அம்மா, அம்மாதான். அவங்க போய் ஒரு வருடம் ஆகிவிட்டது. அதை நான் உணர்கிறேன்.’’

‘‘உங்களுக்கு திருமணம் எப்போது?’’

‘‘அதற்கு என்ன அவசரம்? இப்போதைக்கு இல்லை.’’

Next Story