சினிமா செய்திகள்

தொழில் அதிபரான கீர்த்தி சுரேஷ் + "||" + Business President Keerthi Suresh

தொழில் அதிபரான கீர்த்தி சுரேஷ்

தொழில் அதிபரான கீர்த்தி சுரேஷ்
நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதோடு ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், ஓட்டல் தொழில், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், ஜவுளி கடைகள் என்றெல்லாம் தொழில் செய்கிறார்கள்.
நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதோடு ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், ஓட்டல் தொழில், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், ஜவுளி கடைகள் என்றெல்லாம் தொழில் செய்கிறார்கள். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேசும் தொழில் அதிபராக மாறி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஒரு நல்ல தகவல் சொல்லப் போவதாக அறிவித்து இருந்தார். ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழில் தொடங்கி இருப்பதாக தற்போது அறிவித்து உள்ளார். ரஜினியின் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ளார். செல்வராகவனுடன் நடித்த சாணிகாகிதம் படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அஜித்தின் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன், அதர்வா - ஜோடி கீர்த்தி சுரேஷ்
பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயனாக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
2. ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ்
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மிமி’. இதில் கிரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர்.
3. தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் பேசி தீர்க்க வேண்டும்
தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
4. மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
5. தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.