கொரோனா பரிசோதனை குளறுபடி நடிகை ஷெரின் விளக்கம்


கொரோனா பரிசோதனை குளறுபடி நடிகை ஷெரின் விளக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:50 AM GMT (Updated: 2021-08-23T06:20:40+05:30)

கொரோனா பரிசோதனை குளறுபடி நடிகை ஷெரின் விளக்கம்.

தமிழில் துள்ளுவதோ இளமை, விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள ஷெரின் சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், ''எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தனக்கு கொரோனா என்று பரிசோதனையில் தவறான தகவல் வந்து இருப்பதாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஷெரின் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு இப்போது இரண்டு முறை தொடர்ச்சியாக பரிசோதனை செய்தும் கொரோனா இல்லை என்று வந்துள்ளது. இதனால் இதற்கு முன்னால் செய்த பரிசோதனையில் வந்த கொரோனா தொற்று உள்ளது என்ற தகவல் பொய்யாக இருக்கலாம் என்று எனது டாக்டர் தெரிவித்து உள்ளார். ஆனாலும் பாதுகாப்புக்காக சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன்'' என்று தெரிவித்து உள்ளார்.


Next Story