சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம் உடல் மெலிந்த குஷ்பு + "||" + Viral photo body lean Khushbu

வைரலாகும் புகைப்படம் உடல் மெலிந்த குஷ்பு

வைரலாகும் புகைப்படம் உடல் மெலிந்த குஷ்பு
தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் அரசியல் சமூக கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்து இருப்பதாக குறிப்பிட்டு சேலையில் மெலிந்த தேகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். தற்போது இன்னும் சில உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். நடிகை திரிஷாவும் குஷ்புவின் உருமாறிய அழகான தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு
ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு போலீசார் நடவடிக்கை.
2. ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா? ஸ்மிருதி இரானி
முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார்.