சமந்தா பற்றி வதந்திகள்


சமந்தா பற்றி வதந்திகள்
x
தினத்தந்தி 23 Aug 2021 1:05 AM GMT (Updated: 2021-08-23T06:35:53+05:30)

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயருக்கு பின்னால் நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்துக்கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் சமந்தா அக்கினேனி என்றே தனது பெயரை குறிப்பிட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி பெயரை நீக்கி விட்டு ‘எஸ்' என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும் இருவரும் பிரியப் போகிறார்கள் என்றும் சமூக வலைதளத்தில் தீயாய் தகவல் பரவி வருகிறது. இதற்கு சமந்தா இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் கணவருடன் இணைந்து கோவாவில் சமந்தா பண்ணை வீடு கட்டி வரும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரிய போகிறார்கள் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story