சினிமா செய்திகள்

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா + "||" + Nayanthara trapped in the crowd of fans

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா பார்வை இழந்தவராக நடித்த நெற்றிக்கண் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ரஜினியுடன் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தாவும் இன்னொரு நாயகியாக வருகிறார். நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை காண தினமும் ரசிகர்கள் திரள்கிறார்கள். இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் ஏற வந்த நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவருடன் ‘செல்பி’ எடுக்கவும் கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி நயன்தாராவை பாதுகாப்பாக காரில் ஏற்றினர். காருக்குள் இருந்தபடி ரசிகர்களை பார்த்து நயன்தாரா கையசைத்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேத்தரின் தெரசாவா இது? புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கேத்தரின் தெரசா, கல்லூரி மாணவி போல கட்டுக்கோப்பான உடலிலிருந்து அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.
2. ரகளை செய்த ரசிகர்கள்.. சிக்கி தவித்த நடிகை
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையை திறந்து வைக்க சென்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.
3. பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதல் ஏற்பட்டு ரசிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.
4. ஹன்சிகா படத்தின் பர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
ஹன்சிகா நடிக்கும் 'ரவுடி பேபி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
5. பீஸ்ட்: அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் சாலை மறியல்...!
பீஸ்ட் படத்திற்கான டிக்கட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.