‘காஞ்சனா 3' பட நடிகை தற்கொலை


‘காஞ்சனா 3 பட நடிகை தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2021 6:15 PM GMT (Updated: 2021-08-23T23:45:17+05:30)

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2019-ல் வெளியான காஞ்சனா 3 பேய் படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அலெக்ஸாண்ட்ரா ஜாவி.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2019-ல் வெளியான காஞ்சனா 3 பேய் படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அலெக்ஸாண்ட்ரா ஜாவி.

ரஷ்ய நடிகையும், மாடல் அழகியுமான இவர் காஞ்சனா 3 படம் வெளியான போது சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்ததும், அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24 வயதாகும் அலெக்ஸாண்ட்ரா கோவாவில் ஒரு வீட்டில் காதலருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அலெக்ஸாண்ட்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அலெக்சாண்ட்ராவின் காதலர் வெளியே சென்றபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. காதலருடன் தகராறு ஏற்பட்டு மனம் உடைந்து தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

Next Story