சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்' பொங்கலுக்கு ரிலீஸ் + "||" + Vijay's 'Beast' released for Pongal

விஜய்யின் ‘பீஸ்ட்' பொங்கலுக்கு ரிலீஸ்

விஜய்யின் ‘பீஸ்ட்' பொங்கலுக்கு ரிலீஸ்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 65-வது படம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்துவிட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோவில் நடத்தி வருகிறார்கள்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடக்க உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். யோகிபாபு, வி.டி.வி.கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் சாக்கோ ஆகியோரும் உள்ளனர்.

விஜய் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டனர். அதிரடி படமாக தயாராகிறது. தியேட்டர்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் பீஸ்ட் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு வெளியிட ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது.