சினிமா செய்திகள்

சவுதி, கத்தார், குவைத்தில் அக்‌ஷய்குமார் படத்துக்கு தடை + "||" + Akshay Kumar banned from filming in Saudi Arabia, Qatar, Kuwait

சவுதி, கத்தார், குவைத்தில் அக்‌ஷய்குமார் படத்துக்கு தடை

சவுதி, கத்தார், குவைத்தில் அக்‌ஷய்குமார் படத்துக்கு தடை
சவுதி, கத்தார், குவைத்தில் அக்‌ஷய்குமார் படத்துக்கு தடை.
இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெல்பாட்டம் இந்தி படம் கடந்த 19-ந்தேதி இந்தியாவிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் திரையரங்குகளில் வெளியானது.


இந்த படத்தில் வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். பெல்பாட்டம் படம் 1984-ல் இந்திரா காந்தி ஆட்சியில் நடந்த பயணிகள் விமான கடத்தலை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

கடத்தல் கும்பலிடம் இருந்து பயணிகளை மீட்கும் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த நிலையில் பெல்பாட்டம் படத்துக்கு சவுதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய 3 நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதால் தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.