இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? கமல்ஹாசன் விளக்கம்


இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2021 7:29 PM GMT (Updated: 2021-08-24T00:59:09+05:30)

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? கமல்ஹாசன் விளக்கம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக முடங்கி உள்ளது. தற்போது கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கிறார். ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து, கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், “இந்தியன் 2 படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிந்துள்ளது. சில பிரச்சினைகளால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டு உள்ளன.

இப்போது நான் விக்ரம் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதன்பிறகு மலையாள இயக்குனரும், எடிட்டருமான மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற ஒரு கதை எழுதி வருகிறேன்'' என்றார்.

மகேஷ் நாராயணன் மலையாளத்தில் முன்னணி இயக்குனராகவும், எடிட்டராகவும் உள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கும் எடிட்டராக பணியாற்றி உள்ளார். மலையாளத்தில் பகத் பாசில் நடித்து சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான மாலிக் படத்தை இயக்கி இருந்தார்.

Next Story