திடீரென்று சந்தித்தனர் சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?


திடீரென்று சந்தித்தனர் சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?
x
தினத்தந்தி 24 Aug 2021 5:51 PM GMT (Updated: 2021-08-24T23:21:37+05:30)

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த கவுண்டமணி சமீப காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த கவுண்டமணி சமீப காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த எனக்கு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை ஆகிய படங்கள் 2016-ல் வெளிவந்தன. இந்த நிலையில் கவுண்டமணியை நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது கவுண்டமணியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தலை சிறந்த நடிகரான கவுண்டமணியை சந்தித்தது இனிய தருணமாக அமைந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிப்பாரா? இது சம்பந்தமாகத்தான் இருவரும் சந்தித்து பேசினார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கவுண்டமணி நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ரசிகர்களும் நீண்ட காலத்துக்கு பிறகு கவுண்டமணியை புகைப்படத்தில் பார்த்தது சந்தோஷம் அடைந்தனர். அவர் உங்கள் படத்தில் நடிக்கிறாரா? என்று வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story