நடிகர் அமிதாப்பச்சனின் சொகுசு கார் பறிமுதல்?


நடிகர் அமிதாப்பச்சனின் சொகுசு கார் பறிமுதல்?
x
தினத்தந்தி 24 Aug 2021 5:56 PM GMT (Updated: 2021-08-24T23:26:40+05:30)

நடிகர் அமிதாப்பச்சனின் பெயரில் பதிவு செய்து இருந்த ரோல்ஸ் ராய் காரை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் பெயரில் பதிவு செய்து இருந்த ரோல்ஸ் ராய் காரை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பெங்களூருவில் உள்ள யு.பி.சிட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த ரோல்ஸ் ராய் கார் உள்பட 7 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். ரோல்ஸ் ராய் கார் அமிதாப்பச்சன் பெயரில் பதிவு செய்து இருப்பதை பார்த்து போலீசார் திகைத்தனர். விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் பெயர் பாபு என்றும், நடிகர் அமிதாப்பச்சனிடம் இருந்து விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது. ஆனாலும் இதுவரை பெயர் மாற்றம் செய்யாததால் அமிதாப்பச்சன் பெயரிலேயே இருந்துள்ளது.

இதுகுறித்து காரின் உரிமையாளர் கூறும்போது. “ரோல்ஸ் ராய் காரை 2019-ல் அமிதாப்பச்சனிடம் இருந்து ரூ.6 கோடிக்கு வாங்கினேன். அது பழைய கார்தான். ஆனாலும் அமிதாப்பச்சனுக்கு சொந்தமானது என்பதால் வாங்கினேன். பெயரை மாற்றம் செய்ய விண்ணப்பித்தும் சில காரணங்களால் நடக்கவில்லை'' என்றார்.

Next Story