விமான நிலையத்தில் சல்மான்கானை தடுத்த அதிகாரிக்கு வெகுமதி


விமான நிலையத்தில் சல்மான்கானை தடுத்த அதிகாரிக்கு வெகுமதி
x
தினத்தந்தி 25 Aug 2021 5:59 PM GMT (Updated: 2021-08-25T23:29:37+05:30)

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் டைகர் 3 படப்பிடிப்புக்காக ரஷியா செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்தார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் டைகர் 3 படப்பிடிப்புக்காக ரஷியா செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பகுதியில் அதிகாரிகளின் சோதனைக்கு நிற்காமல் முக கவசத்தை கழற்றி முகத்தை அதிகாரிகளுக்கு காட்டியபடி உள்ளே நுழைய முயன்றார். அவரை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) இளம் அதிகாரி தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனைகளை முடித்து ஒப்புதல் பெற்று உள்ளே வரும்படி அறிவுறுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

பிரபல நடிகர் சல்மான்கான் என்பதை கண்டுகொள்ளாமல் கடமையை செய்ததாக அந்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் சல்மான்கானை தடுத்த அதிகாரி மீது சி.ஐ.எஸ்.எப். நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்து விட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்த சி.ஐ.எஸ்.எப், “அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல் பொய்யானது. உண்மையில் அந்த அதிகாரிக்கு கடமையை சிறப்பாக செய்தமைக்காக வெகுமதி அளிக்கப்பட்டது'' என்று கூறியுள்ளது.


Next Story