சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு எதிர்ப்பு + "||" + Aishwarya Rajesh protests against ODT

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு எதிர்ப்பு

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு எதிர்ப்பு
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானியுடன் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதாக அறிவித்து உள்ளனர். டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தெலுங்கானா தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தெலுங்கானா பிலிம் சேம்பர் செயலாளர் சுனில் நாரன் தலைமையில் நடந்த தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சுனில் நாரன் கூறும்போது, “பெரிய பட்ஜெட் படமான டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவை கைவிட வேண்டும். தியேட்டரில் வெளியிட்டால்தான் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் எதிர்ப்பால் தலீபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முடிவை இரண்டாவது முறையாக தலீபான்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
3. செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.
4. தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 2½ மணி நேரம் கடைகள் அடைத்து நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5. புதிய படத்துக்கு தயாராகும் அஜித்
அஜித்குமாரின் ‘வலிமை’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.